கத்தாரில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம் தகவல்

கத்தாரில் நாளை (அக்டேபர்-18) இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதாக வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
, மேலும் அந்த செய்தியில் சமீபத்திய வானிலை விளக்கப்படங்கள் நாட்டில் மழை மேகங்கள் உருவாவதைக் காட்டுகின்றன என்று கத்தார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள், அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் மழை மேகங்கள் உருவாகும் என்றும், சில நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த காலநிலை நிலவும் என்பதோடு, இது அல் வஸ்மி (மழைகாலத்தின்) பருவத்தின் தொடக்கம் என்பதாக திணைக்களம் அறிவித்திருந்தது. மேலும் இந்த நிலையானது டிசம்பர் 6 வரை நீடிக்கும். இந்த 52 நாள் காலகட்டத்தில் தோஹாவில் வெப்பநிலை குறைவடைந்து வரும் என்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: கத்தாரில் விசா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் அதிகாரிகளால் கைது!