கத்தாரில் கோலாகலமாக ஆரம்பமான 23 வயதிற்குட்பட்டோருக்கான கால்ப்பந்து ஆசியக் கோப்பை 2024

AFC U23 Asian Cup Qatar 2024

கத்தாரில் வயதிற்குட்பட்தோருக்கான கால்ப்பந்து ஆசியக் கோப்பை 2024 நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக ஆரம்பமானது.

ஆசிய கால்பந்து கூட்டமைப்பினால் 2024ம் ஆண்டுக்கான 6ம் கட்ட போட்டிகள் ஏப்ரல் மாதம் 15ம் திகதி ஆரம்பித்து, மே மாதம் 3ம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதில் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த 16 நாடுகள் பங்கு பற்றுகின்றன. இந்த 16 நாடுகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

குழு யில் கத்தார், அவுஸ்திரேலியா, ஜேர்தான் மற்றும் இந்துனோசியா போன்ற நாடுகளும், குழு யில் ஜப்பான, தென்கொரியா, ஐக்கிய அரபு அமீரகம், சீனா போன்ற நாடுகளும், குழு யில் சவுதி அரேபியா, ஈராக், தாய்லாந்து, தஜிகிஸ்தான் போன்ற நாடுகளும், குழு யில் உஸ்பெகிஸ்தான், வியட்நாம், குவைத் மற்றும்  மலேசியா போன்ற நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.

 மொத்தமாக 32 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள், ஜாஸ்ஸிம் பின் ஹமத் மைதானம், அல் ஜனூப் மைதானம், அப்துல்லா பின் கலீபா மைதானம், மற்றும் கலீபா சர்வதேச மைதானம் போன்றவற்றில் நடைபெறவுள்ளன.

2024ம் ஆண்டுக்கான 23 வயதிற்குட்பட்தோருக்கான கால்ப்பந்து ஆசியக் கோப்பையானது அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்தான் நாடுகளுக்கிடையிலான போட்டியுடன் ஆரம்பமானது. இதில் இரண்டு அணிகளும் கோல்கள் பெறத் தவறியதன் காரணமாக முதற் போட்டியானது வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது.

இரண்டாவது போட்டி போட்டியை நடத்தும் நானான கத்தார் மற்றும் இந்துனோசியா அணிகள் மேதின. இதில் கத்தார் 2-0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி வகை கூடியது.

இரண்டாவது நாளான இன்றைய தினம், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான ஒரு போட்டியும், ஈராக் மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையில் இரண்டாவது போட்டியும், கொரியா மற்றும் அமீரகத்திற்கிடையில் 3 வது போட்டியும், சவுதி அரேபியா மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளுக்கிடையிலான 4வது போட்டியும் நடைபெறவுள்ளன.

மேற்படி போட்டி நிகழ்ச்சிகளை நேரடியாக கண்டுகளிக்க விரும்புபவர்கள், இங்கு சென்று டிக்கட்டுக்களை கொள்வனது செய்து கொள்ள முடியும்.

Also Read: கத்தாரில் இடியுடன் கூடிய மழை இன்று முதல் 17ம் திகதி வரை பெய்ய வாய்ப்பு – வானிலை அவதான நிலையம் தகவல்

Leave a Reply