டாக்சிகள், பேருந்துகள் அதிவேக சாலையின் இடது பாதையைப்(Lane) பயன்படுத்த தடை!

கத்தார்: இன்று முதல், 25 க்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்ட பேருந்துகள், டாக்சிகள், லிமோசின்கள் மற்றும் டெலிவரி மோட்டார் சைக்கிள்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாதைகள் கொண்ட சாலை நெட்வொர்க்குகளில் இடது பாதையைப் (Lane)பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாகனங்கள் குறுக்குவெட்டுகளுக்கு (intersections) 300 மீட்டர் முன்பாக குறைந்தது 300 மீட்டர் பாதையை மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது,

உள்துறை அமைச்சகத்தின் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பிரிகேடியர் அப்துல்லா கலீஃபா அல் முஃப்தா இன்று மே 22, 2024 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார்.

“மே 22, 2024 முதல், போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு எண். 49 இன் விதிகளின்படி, (25) பயணிகளுக்கு மேல் உள்ள பேருந்துகள், டாக்சிகள், லிமோசின்கள் மற்றும் டெலிவரி சேவைகளுக்கான மோட்டார் சைக்கிள்கள் சாலையில் இடது பாதையைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு திசையிலும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாதைகள் கொண்ட நெட்வொர்க்குகள், குறுக்குவெட்டுகளுக்கு முன் குறைந்தது (300 மீட்டர்) பாதையை மாற்ற அனுமதிக்கப்படுகிறது,” என்று அமைச்சகம் அதன் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பாதையைக் கடைப்பிடிக்கத் தவறினால், மேற்கூறிய போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு (95) இன் படி, உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply