கத்தாரில் கடும் மழையுடன் கூடிய காலநிலை, பாடசாலைகள், பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை!

கத்தார் முழுவதும் உள்ள பல தனியார் பாடசாலைகள், தற்போது கத்தாரில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக  செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவித்துள்ளன. மேலும் பல பாடசாலைகள் வகுப்புக்களை ஆன்லைன்  மூலம் நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளதாக கல்ப் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கத்தார் பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் அனைவரும் வீட்டிலிருந்து பணிகளில் ஈடுபடுமாறு பணித்துள்ளது.

அரச பாடசாலைகளைப் பொறுத்தவரையில் அனைத்து வகுப்புக்களுமான பாடங்கள் ஆன்லைன் வழியாக நடைபெறவுள்ளதாக கல்வயிமைச்சின் செய்திகள் தெரிவிக்கின்றன.  மேலும் நோன்புப் பெருநாள் முடிவடைந்து 17ம் திகதி பணிகளை ஆரம்பிக்கவிருந்த அமைச்சகங்கள், அரச அலுவலகங்களின் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டள்ளனர். என்றாலும், பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடலை அண்மித்த பகுதிகளில் ஒன்று கூடுதல் உட்பட கடலை அண்மித்த அனைத்து வகையாக செயற்பாடுகளை உள்துறை அமைச்சு தடைசெய்துள்ளது.   கத்தாரில் இடியுடன் கூடடிய மழைக்கான எதிர்வு கூறல் எதிர்வரும் 17ம் திகதி வரை கத்தார் வானிலை அவதான நிலையத்தினால் இன்று விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Also Read: கத்தாரில் இடியுடன் கூடிய மழை இன்று முதல் 17ம் திகதி வரை பெய்ய வாய்ப்பு – வானிலை அவதான நிலையம் தகவல்

Leave a Reply