கத்தாரில் பற்றி எரிந்த பிரபல கோபுரக் கட்டிடம் (வீடியோ இணைப்பு)

Qatar West Bay tower fire Accident Update

கத்தாரின் மேற்கு விரிகுடாவில்(Westbay) நகரில் அமைந்துள்ள உம் பாப் கோபுரத்தில் பாரிய தீ விபத்து சம்பவம் கடந்த 21ம் திகதி பதிவாகியுள்ளது.  இது தொடர்பாக கத்தார் உள்துறை  அமைச்சு கருத்து தெரிவிக்கும் போது,  மேற்படி தீ விபத்தானது உடனடியாக வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேவும் தீ விபத்தில்  உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் உத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தீப்பிடித்த கட்டிடத்தின் சில பகுதிகளை வழிப்போக்கர்கள் படம்பிடித்ததால், சம்பவத்தை படம்பிடிக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. தொலைவில் இருந்து மேற்கு வளைகுடாவில் இருண்ட புகை மேகம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *