கத்தார் சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

doctor dies of extreme weather in Qatar

கத்தாரில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்ந சம்பவமொன்று  பதிவாகியுள்ளது. கத்தார் ஹமத் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரே சீலைன் பகுதி கடலில் நேற்றிரவு மூழ்கி உயிரிந்துள்ளார்.

சிரிய நாட்டைச்சேர்ந்த இவர் ஹமத் பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு பிரிவின் குழந்தை மருத்துவ நிபுணராவார். இவரது பெயர் Dr. Majid Sulaiman Al-Shannour Al-Nouami என்பதாகும்.

கத்தாரில் உள்ள சிரிய மருத்துவ சங்கம் (SMAQ) தனது முகநூல் பக்கத்தில் உயிரிழந்த மருத்துவருக்கு இரங்கல் தெரிவித்து, வைத்தியர் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.

கத்தாரில் வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று விடுத்திருந்தமை குறிபிடத்தக்கது.

Also Read: கத்தாரில் இடியுடன் கூடிய மழை இன்று முதல் 17ம் திகதி வரை பெய்ய வாய்ப்பு – வானிலை அவதான நிலையம் தகவல்

Leave a Reply