கத்தாரிலிருந்து பெருநாளைக்கு தாயகம் திரும்ப இருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

HIA issues advisory for passengers departing during Eid Al-Adha holidays

எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு தாயகம் திரும்ப, அல்லது கத்தாருக்கு பயணிக்க இருப்போருக்கு கத்தார் ஹமத் விமான நிலையத்தால் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பயணிகள் அனைவரும் தங்களை ஆன்லைனில் செக்-இன் ( Check-In Online) செய்து கொள்ளும் படியும், விமானம் பயணிக்க முன்னர் குறைந்து 3 மணித்தியாலங்களுக்கு முன்னர்  விமான நிலையத்தை வந்தடையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள், இஹ்திராஷ் செயலியில் ஆரோக்கிய அடையாளமான பச்சை நிறக் குறியீட்டைக் கொண்டிருப்பதோடு, PCR பரிசோதனை செய்து எதிர்மறை சான்றிதழை (negative PCR certificate) 72 மணித்தியாலங்களுக்குள் பெற்றிருந்தால் மட்டுமே டெர்மினல் கட்டிடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உரிய பயணிகள் மட்டுமே டெர்மினல் கட்டிடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பயணிகளுடன் ஏனையவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அத்துடன் வாகனங்களில் விமான நிலைய வளாகத்திற்கு வருபவர்கள் குறுகிய நேர கார் பார்க் வசதியைப் படுன்படுத்தி நெரிசலைக்குறைக்கும் படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உரிய பயணிகள் தங்களது பயண ஏற்பாடுகளை தாங்களாகவே செய்து கொள்வதோடு, சோதனை இடம் (check in Counter) விமானம் பயணிக்க 60 நிமிடங்களுக்கு முன்னர் மூடப்படும் என்பதாக விமான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் பயணிகள், தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டுவருவதை தவிர்த்துக்கொள்வதோடு உரிய சோதனைகளுக்கு தங்களது பங்களிப்புக்களை வழங்கும் படி கேட்டுக் கொள்ளபட்டுள்ளனர். அத்துடன் HIAQatar என்ற கத்தார் விமான நிலையத்தின் அன்ரொயிட் மற்றும் ஐபோன் செயலிகளை தரவிறக்கம் செய்த உரிய அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ளும் படி மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

One Comment on “கத்தாரிலிருந்து பெருநாளைக்கு தாயகம் திரும்ப இருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!”

Leave a Reply