கத்தாரில் சட்ட விரோதமாக தங்கியிருப்போருக்கான சலுகை காலம் மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது

Qatar Extend the grace period to correct their legal status

கத்தாரில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கான சலுகை காலம் மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கத்தாரின் 2015ம் ஆண்டு 21ம் இலக்க குடிவரவு மற்றும் குடியவல் விதிகளை மீறி கத்தாரில் சட்ட விரோதமாக தங்கியிருப்போர் தங்களது, சட்ட மீறல்களை சரி செய்வதற்கு வழங்கப்பட்ட காலம் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.  என்றாலும் தங்களது வீசா விதி மீறல்களை சரி செய்ய தவறியவர்களைக் கருத்திற் கொண்டு சலுகைக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்துள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்த சட்ட விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள் / தொழில் வழங்குனர்கள்/பணியகங்கள் தேடுதல்-பின் தொடர்தல் திணைக்களத்திற்கோ அல்லது உம் சலால் சேவை நிலையம், உம் சுனைம் நிலையம் (பழைய செனெய்யா), மிஸய்மீர் சேவை நிலையம், அல் வக்ரா சேவை நிலையம், அல் ராய்யான் சேவை நிலைங்களிற்கு பிற்பகல் 1 மணி முதல் 6 மணி வரை சமூகமளித்து, இச்சட்ட விதிகளின் அடிப்படையில் அபராத குறைப்பு அல்லது விதிவிலக்கு பெற உங்கள் வேண்டுகோள்களை சமர்ப்பிக்கலாம்.

இச்சட்ட அந்தஸ்தை சரிசெய்து கொள்ள தகுதியான நபர்கள் / பிரிவுகள்

  • குடியிருப்பு சட்டத்தை மீறிய வெளிநாட்டவர்கள்
  • வேலைவாய்ப்பு வீஸா சட்ட விதிகளை மீறியவர்கள்
  • குடும்ப வருகை வீஸா விதிகளை மீறியவர்கள்

சட்ட மீறல்களை மேற்கொண்ட பணியகங்கள் / வெளிநாட்டவர்கள் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தமது சட்ட அந்தஸ்த்தை சரி செய்து கொண்டு, சட்ட நடவடிக்கைகளில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு உள்துறை அமைச்சு பொதுமக்களை வேண்டிக் கொள்கிறது.

One Comment on “கத்தாரில் சட்ட விரோதமாக தங்கியிருப்போருக்கான சலுகை காலம் மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது”

  1. கத்தாரில் இருந்து வீட்டு டிரைவர் விசா கேன்சல் செய்து வந்தவர்கள் எத்தனை நாட்கள் முடிந்து மீண்டும் கத்தார் செல்ல முடியும்,

Leave a Reply