கத்தாரில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆரம்பித்துள்ளது – தலைமை வைத்தியர் தகவல்!

கத்தாரில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆரம்பித்துள்ளதாக உத்தியோக பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. கத்தார் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் தலைமை வைத்தியர் Dr. Soha Al Bayat அவர்களே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

கத்தாரில் கடந்த சில நாட்களாக கொரோனாவினால் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இன்று மாத்திரம் 1177 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும், தகைமையுடையவர்கள் பூஸ்டர் (மூன்றாவது) தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் வைத்தியர் Dr. Soha Al Bayat அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கத்தார் தொலைக்காட்சிக்கு நேற்றைய (02.01.2022) வழங்கிய விசேட செவ்விலேயே இந்த தகவ்லை வெளியிட்டுள்ளார்கள்.  கொரோனாவின் சிரிய அடையாளம் தென்படுபவர்கள் வீடுகளில் தங்களை சுய தனிமைப்படுத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுமாறும், அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும், கத்தாரில் தற்போது வேகமாக பரவும் கொரோனா தொற்றானது கொரோனாவின் மூன்றாவது அலையென்பதாக Dr. Soha Al Bayat  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply