கத்தாரில் விசா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் அதிகாரிகளால் கைது!

கத்தாரில் விசா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

‘சட்டவிரோத விசா வர்த்தகத்தில்’ ஈடுபட்ட அரபு வம்சாவளியைச் சேர்ந்த இருவர்  தேடல் மற்றும் பின்தொடர்தல் துறையினால் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் (MoI) அறிவித்துள்ளது.

நிதி ஆதாயங்களுக்காக பல போலி நிறுவனங்கள் மூலம் செயல்படும் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு நபருடன்  கைது செய்யப்பட்ட அரபு வம்சாவழி நபர் ஒன்றிணைந்து விசா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகளுக்காக பொது நீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க கத்தாரில் உங்களுக்கு வரும் போலி தொலைபேசி அழைப்புக்கள் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
WhatsApp Group Join Here

Leave a Reply