கத்தாரில் இன்று(21ம் திகதி) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – வானிலை அவதான நிலையம் தகவல்

கத்தாரில் இன்று(21ம் திகதி) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் கடல் அலைகள் கடுமையாக இருக்கும் என்பதோடு, அலைகள் 2 முதல் 4 அடிகள் வரை உயரக் கூடும் எனவும், சில பகுதிகளில் 8 அடிகள் வரை அலைகள் உயர வாய்ப்புள்ளதாக QMD தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, பகல்நேர வெப்பநிலை மிதமானது முதல் ஒப்பீட்டளவில் வெப்பமாகவும், வானம் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும். மேலும், ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என் தெரிவிக்கப்பட்டுள்ளது,

தென்கிழக்கில் இருந்து கிழக்கு நோக்கி காற்று வீசும் என்றும், லேசானது முதல் மிதமான வேகத்தில் காற்று வீசக்கூடும். நாடு முழுவதும் மிகக் குறைந்த வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Also Read: 2024ம் ஆண்டின் சிறந்த விமான நிலையமாக கத்தார் ஹமத் விமான நிலையம் தேர்வானது

Leave a Reply