Qatar NewsQatar Tamil News

கத்தார் கடற்கரையில் காணாமல் போய் 3 நாட்களாக தேடப்பட்டவர் சடலமாக மீட்பு! (வீடியோ)

கத்தாரின் அல் உகைர் தெற்கு கடற்கரையில் காணாமல் போய் கடந்த 3 நாட்களாக தேடப்பட்டுவந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கத்தாரின் அல் ஷார்க் தினசரிப் பத்திரிகை அவர் கடந்த இரவு(செப்-08) திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், உறவினர்கள் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் அவரது மரணத்திற்கான காரணம் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

கடந்த 3 நாட்களுக்கு முன்னால் மேற்படி நபர் காணாமல் போயுள்ளார் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பதிவைத் தொடர்ந்து அதிகாரிகளும், இளைஞர் குழுவொன்றும் நடத்திய தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் 1988ம் ஆண்டு பிறந்தவர்கள் என்பதாகவும், 2003ம் ஆண்டு உற்பத்தியான Silver Land Cruiser GX வாகனத்தைச் செலுத்துபவர் என்பதாகவும், இறுதியாக, அல் உகைர் கடற்கரையில் நின்று உறவினர்களுடன் கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தார் திரும்பும் பயணிகளுக்கு ஹமத் விமான நிலையத்தில் புதிய நடைமுறை! 20 நிமிடங்களில் வெளியேறலாம்!

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: