வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்பும் அனைத்து பயணிகளுக்கும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுதல்..!

இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி. வி சானக தெரிவித்துள்ளார்.
பயணிகள் எதிர்மறையான PCR பரிசோதனையுடன் வர வேண்டும் என்றும், கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையத்திற்கு வந்ததும் அவர்கள் மற்றொரு PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
பின்னர் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள்.
சுமார் 10 நாட்களில் மற்றொரு PCR பரிசோதனையையும் நடத்துவோம். அந்த PCR சோதனை எதிர்மறையானது என்பதை உறுதிப்படுத்தினால், அவர்களை சமூகத்திற்குள் விடுவிப்போம், என்று அவர் கூறினார்.
கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த இலங்கை விமான நிலையம் நேற்று (01.06.2021) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், கத்தார் இராஜ்ஜியம், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், ஜேர்மன் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து 10க்கும் மேற்பட்ட விமானங்களில் 1000க்கும் மேட்பட்டவர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தனிமையப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையச் செய்திகள் தெரிவிக்கின்றன.
i have “covid vaccine certificate ” than also i need 14days quarantine?