கத்தாரிலிருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த இலங்கை பெண் விமானத்தில் உயிரிழப்பு.

Sri Lankan woman who was returning from Qatar died in the flight.

கத்தாருக்கு  பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும்போது விமானத்தில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கத்தார் ஏர்வேஸ் விமானமான KR-662 மூலம் அவர் இன்று (23) அதிகாலை 1.17 மணியளவில் கத்தாரின் தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்துள்ளார்.

விமானம் இலங்கைக்கு வந்து கொண்டிருந்தபோது இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக விமான நிலையச் செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: Safety Officer – கத்தாரில் அமைந்துள்ள இலங்கை பாடசாலையில் வேலைவாய்ப்புக்கள்

Leave a Reply