சவுதி அரேபியாவில் அமைந்துள்ள இரண்டு புனித தளங்களில் இன்று முதல் (17.10.2021) மக்கள் வணக்கங்களுக்கு முழுமையாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சவுதியில் கொரோனா தாக்கம் குறைவடைந்து வரும் நிலையில் புனித தலங்களுக்கு யாத்திரிகள் முழுமையாக அனுமதிகப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
என்றாலும் யாத்திரிகர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி இருக்க வேண்டும் என்பதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொது வெளிகளில் மாஸ்க் அணிவது, மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுவது கட்டாயமில்லையெனவும் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் உணவகங்கள், விளையாட்ரங்குகள், திருமண மண்டபங்கள், உட்பட பொதுப் போக்குவரத்து உட்பட அனைத்தும் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன..
புனித கஃபா மற்றும் மஸ்ஜிதுன் நபவி போன்ற தளங்களில் சுமார் 17 மாதங்களில் சமூக இடைவெளி அற்ற தொழுகை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கத்தார் விமான நிலையத்தில் அத்தையை வழியனுப்ப பாதுகாப்பு அதிகாரியிடம் மழலை மொழியில் அனுமதி கேட்ட குழந்தை (VIDEO)