சவூதியில் பன்மடங்கு உயர்கிறது பணியாளர்களின் சம்பளம் – 2024 அறிக்கை

salaries to increase in saudi arabia 2024

சவுதி அரேபியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பன்மடங்கு ஊதிய உயர்வு கிடைக்கும் என சவூதியில் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி எண்ணெயை நம்பியிருக்கும் நாடு ஆகும். சமீப காலமாக எண்ணெய் உற்பத்தியை மட்டுமே நம்பி இராமல் சுற்றுலா, தொழில்துறை மேம்பாடு, உள்நாட்டு தயாரிப்புகள் போன்ற பல்வேறு காரணங்களால் பொருளாதாரத்தை பன்மடங்கு பெருக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதனால் திறமையான தொழிலாளர்களுக்கான தேவை சவூதியில் அதிகரித்துள்ளது.

சவுதியின் நியோம் சிட்டி (Neom City) கட்டுமானம் மற்றும் ஆட்சேர்ப்பு நிபுணரான கூப்பர் ஃபிட்சின் நுண்ணறிவுகளின்படி, $500 பில்லியன் நியோம் நகரம், செங்கடல் திட்டம் மற்றும் அல்உலா போன்ற முக்கிய திட்டங்களுக்குத் திறமையான நபர்கள் தேவைப்படுகின்றனர். (இந்நேரம்.காம்)

“இதனால் சவுதி அரேபியா கணிசமான சம்பள உயர்வுக்கு தயாராகி வருகிறது, 2024 ஆம் ஆண்டில் மட்டும் சராசரியாக 6% ஊதியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று நியோம் சிட்டி அப்டேட்ஸ் தெரிவித்துள்ளது.

ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், சவுதி அரேபியா ஐந்து புதிய விசா வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக திறமையான தொழில் வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டத்தினை சவூதி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வகைகளில் சிறப்புத் திறமை, திறமையானவர்கள், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் ஆகியோருக்கான விசாக்கள் அடங்கும்.

(இந்நேரம்.காம்)

Leave a Reply