Saudi News

2034 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தபோகும் சவுதி அரேபியா!

2034ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையானது சவுதி அரேபியாவுக்கு கிடைத்தது.

2033 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அவுதி அரேபியா நடத்தும் என்று பிஃபா தலைவர் கியானி இன்ஃபாண்டினோ அறிவித்துள்ளார்.

வருகின்ற 2034ம் ஆண்டுக்காக உலகக் கோப்பையை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா நாடுகள் ஆர்வம் காட்டின. இந்தநிலையில், போட்டிக்கான உரிமத்தை பெறும் நடவடிக்கையில் இருந்து ஆஸ்திரேலியா நேற்று விலகியது. இதன் காரணமாக, 2034ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையானது சவுதி அரேபியாவுக்கு கிடைத்தது.

உலகக் கோப்பையின் அடுத்த பதிப்பு வருகின்ற 2026 ம் ஆண்டு வட அமெரிக்க நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும். 2030 ம் ஆண்டு ஆப்பிரிக்கா (மொராக்கோ) மற்றும் ஐரோப்பா (போர்ச்சுகல், ஸ்பெயின்) உலகக் கோப்பையை நடத்தும். இதன் ஒரு பகுதியாக அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே போன்ற தென் அமெரிக்க நாடுகளில் தொடக்கப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து, ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ மூன்று பதிப்புகள், ஐந்து கண்டங்கள், போட்டிகளை பத்து நாடுகள் நடத்துகிறது – இது கால்பந்தை உண்மையில் உலகளாவிய விளையாட்டாக மாற்றுகிறது” என பதிவிட்டு இருந்தார்.

அக்டோபர் முதல் வாரத்தில் உலகக் கோப்பையை நடத்த ஆசியா மற்றும் ஓசியானியா நாடுகளை ஃபிஃபா அழைத்த பிறகு, சவுதி அரேபியா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியது. சவுதி அரேபியாவைத் தவிர ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இடத்திற்கான போட்டியில் இருந்தன. இந்த ஆண்டு மகளிர் உலகக் கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டி சவுதி அரேபியாவின் அண்டை நாடான கத்தாரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது. உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது சவுதி அரேபிய அணி. சவுதி ஒன்றுக்கு எதிராக இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்ற இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த சவுதி, குரூப் சியில் கடைசி இடமாக கத்தாரில் இருந்து திரும்பியது.

முன்னதாக, 2030 ஆண்கள் உலகக் கோப்பை போட்டியின் முதல் பதிப்பின் 100 ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக மூன்று வெவ்வேறு கண்டங்களில் உள்ள ஆறு நாடுகளால் நடத்தப்படும் என்று பிபா அறிவித்திருந்தது. அதன்படி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இணைந்து போட்டியை நடத்துகின்றன, அதே நேரத்தில் உருகுவே, பராகுவே மற்றும் அர்ஜென்டினா ஆகியவை முதல் உலகக் கோப்பை அரங்கேறி 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் தலா ஒரு தொடக்க ஆட்டத்தை நடத்தும். 1930 போட்டியை உருகுவே நடத்தி வெற்றி பெற்றது.

கடந்த 2022 ம் ஆண்டு கத்தாரின் தோஹாவில் நடந்த இறுதிப் போட்டியில் பிரான்சை பெனால்டியில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இப்போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது இது மூன்றாவது முறையாகும். (tamil.abplive)


Also Read: கத்தாரில் 2023ம் ஆண்டு நவம்பர் மாத எரிபொருள் விலைகள் விபரம் வெளியானது.

Related Articles

Leave a Reply

Back to top button
%d