கத்தாரில் 2023ம் ஆண்டு நவம்பர் மாத எரிபொருள் விலைகள் விபரம் வெளியானது.

2023 November Fuel Price Qatar

நவம்பர் 2023 மாதத்திற்கான எரிபொருள் விலையை கத்தார் எனர்ஜி இன்று(2023.10.31)  அறிவித்துள்ளது. .

பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு QR 1.95 ஆகவும், சூப்பர் ரக பெட்ரோல் விலை QR2.10 ஆகவும், டீசலின் விலையும் மாறாமல் உள்ளது, வரும் மாதத்தில் லிட்டருக்கு QR2.05 விற்பனை செய்யப்படவுள்ளது.

கடந்த சில மாதங்களாக, டீசல் மற்றும் சூப்பர் தர பெட்ரோல் விலை நிலையாக உள்ளது, அதே சமயம் பிரிமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு QR 2.05 முதல் QR 1.90 வரை ஏற்ற இறக்கமாக உள்ளது.

எரிசக்தி மற்றும் தொழில்துறை அமைச்சகம் சர்வதேச சந்தையுடன் எரிபொருள் விலையை நிர்ணயிக்கத் தொடங்கியது மற்றும் செப்டம்பர் 2017 முதல், மாதாந்திர விலைப்பட்டியலை கத்தார் எனர்ஜி  அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Also Read: கத்தாரில் இஸ்ரேலுக்காக உளவு பார்த்த எட்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு!

Leave a Reply