கத்தாரில் உள்ளூர் உற்பத்திக்கான குளிர்கால சந்தை மீள திறக்கப்பட்டது!

Qatar reopen winter Sales market for local vegetables

கத்தாரில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்கப்படுத்தி, சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க கத்தார் சுற்றுச் சூழல் மற்றும் நகராட்சி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு சந்தையே குளிர்கால சந்தையாகும். இது கத்தாரில் குளிர் காலம் ஆரம்பிக்கும் நவம்பர் மாத ஆரம்பித்தில் தெரிவு செய்யப்பட்டப் நகராட்சி அதிகாரப் பிரதேசங்களில் திறக்கப்படுகின்றது.

2023ம் ஆண்டுக்கான குளிர்கால சந்தைகள் நேற்றைய தினம் (04.11.2023) அன்று ஆரம்பிக்கப்பட்டன.

  • அல் முன்தசா
  • அல் வக்ரா,
  • அல்கோர்,
  • அல் ஷமால் மற்றும்
  • அல் ஷஹானிய்யா போன்ற நான்கு நகராட்சி பிரிவுகளில் இந்த சந்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கத்தாரின் உள்ளூர் சந்தைகளில் விளையும், வெள்ளரிக்காய், சுரைக்காய் மற்றும் கத்தரிக்காய் போன்ற காய்கறிகள் அதிகளவில் விற்பனை வந்துள்ளது.

2023ம் ஆண்டுக்கான குளிர்கால சந்தையை நிகழ்வை ஆரம்பித்துக் வைக்க கத்தார் நகராட்சி மையத்தின் விவசாயப் திணைக்களப் பொறுப்பாளர் Yousef Khaled Al-Khulaifi, 140க்கும் அதிகமான பண்ணை உரிமையாளர்கள் கலந்து கொண்டதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன.

2023ம் ஆண்டுக்கான குளிர்கால சந்தையில் குறைந்நது 14,000 டன் அளவிலான காய்கறி வகைகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக கத்தார் நகராட்சி மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: 2034 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தபோகும் சவுதி அரேபியா!

Leave a Reply