Qatar Tamil News

கத்தார் விமான நிலையத்தில் அத்தையை வழியனுப்ப பாதுகாப்பு அதிகாரியிடம் மழலை மொழியில் அனுமதி கேட்ட குழந்தை (Video)

கத்தார் நாட்டின் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் அழகான சின்னஞ்சிறு பெண் குழந்தை ஒன்று தன் அத்தையை கட்டிப்பிடித்து வழி அனுப்புவதற்காக அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் மழலை மொழியில் அனுமதி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

அதன் பின்னர் அந்த அதிகாரியும் அனுமதி அளித்ததை அடுத்து அந்த குழந்தை விறு விறுவென தளிர்நடை போட்டு விமான நிலைய உள்பகுதிக்குள் செல்கிறாள். அங்கு குழந்தையை கண்ட அத்தை ஓடி வந்து கட்டிப்பிடித்து தூக்கி கொஞ்சினார்.

.இந்த நிகழ்வானது கடந்த 14ம் திகதி டவீட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதோடு இதுவரையில்  அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர். வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கத்தாரில் கோவிட் -19 வெப்ப திரையிடல் நடைமுறைகளில் மாற்றம்!

Related Articles

Leave a Reply

Back to top button
%d