Qatar Tamil News

கத்தார் தனியார் வைத்தியசாலைகளில் அன்டீஜன் பரிசோதனை செய்ய எவ்வளவு தெரியுமா!

Antigen Rate in Qatar

கத்தாரில் வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு ஆரம்ப சுகாதார மருத்துவ நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் வைத்தியசாலைகளில் PCR மற்றும் அன்டீஜன் (Rapid Antigen Test: Covid-19) பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அன்டீஜன் பரிசோதனைகளுக்கு அதிகாரமளிக்கப்பட்ட வைத்தியசாலைகளின் பெயர் விபரங்களை கத்தார் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

என்றாலும் அன்டீஜன்  பரிசோதனைக்கான கட்டணம் எவ்வளவு என்பதாக வெளிப்படையாக செய்திகளில் வெளியாகவில்லை. என்றாலும் தனியார் வைத்தியசாலைகளில் அன்டீஜன் பரிசோதனைக்கான விளம்பரங்களை தங்களது சமூக வலைதளங்கள் ஊடாக விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ளன.

அதன் படி, கத்தாரின் தனியார் வைத்தியசாலையான Doha Clinic Hospital. தனது இணைய தளத்தில் அன்டீஜன்  பரிசோதனைக்கான கட்டணம் தனிநபரொருவருக்கு 50 கத்தாரி றியால்கள் என்பதாக தெரிவித்துள்ளது. மேலும் Al Jameel Medical Center நிலையமும் 50 றியால்கள் என்பதாக தெரிவித்துள்ளது.
Also Read : கத்தாரில் PCR பரிசோதனைக்க எவ்வளவு தெரியுமா

Related Articles

Leave a Reply

Back to top button
%d