கத்தாரில் PCR பரிசோதனைக் கட்டணம் 300 றியால்களாக நிர்ணயம் செய்யப்பட்டது!

கத்தாரில் PCR பரிசோதனைக் கட்டணம் 300 றியால்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கத்தாரின் அரச மருத்துவ நிலையங்களில் வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர்களுக்கான கொரோனா பரிசோதகைள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தனியர் வைத்தியசாலைகளில் பரிசோதனை செய்ய கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரிந்துரை செய்யப்பட்டது. பரிசோதனைக்காக தெரிவு செய்யப்பட்ட 44 வைத்திய சாலைகளின் பெயர் விபரங்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டன. என்றாலும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் எவ்வளவு என்பதாக தெரிவிக்கப்படாத நிலையில். தனியார் மருத்துவ சாலைகள் அதிக கட்டணம் வசூலிக்க ஆரம்பித்த நிலையில், பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணத்தை கத்தார்  சுகாதார அமைச்சு நிர்ணயம் செய்துள்ளது.

அதன் படி அதிகபட்சமாக 300 றியால்கள் PCR பரிசோதனைக்காக அறவிடப்பட முடியும் என்பதாக தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்றைய (08.04.2021) தினம் முதல் பின்பற்றப்படவேண்டும் என்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசியுங்கள்  : கத்தாரில் PCR பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்ட தனியார் வைத்தியசாலைகள் : புதிய பட்டியல்!

Leave a Reply