உணவுப் பொருட்களுக்குள் மறைத்து கத்தாருக்கு கடத்தப்பட்ட கஞ்சா சுங்கத்துறையால் பறிமுதல்!

Hashish found Qatar Airport

உணவுப் பொருட்களுக்குள் மறைத்து கத்தாருக்குள் கடத்தப்பட்ட கஞ்சா சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கத்துறையில் அமைந்துள்ள சரக்கு மற்றும் விமான நிலையங்கள் பிரிவு அதிகாரிகள் இந்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

உணவுப் பொருட்களுக்குள் மறைத்து கத்தாருக்குள் கடத்தப்படவிருந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாயின் எடை 522 கிராம்கள் என்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாருக்கு வருகை தருபவர்கள் அனுமதிக்கப்படாத பொருட்களை கொண்டு வருதல் தொடர்பாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விமான நிலையம், மற்றும் சுங்க பரிசோதனை நிலையங்கள் போன்றவற்றில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு சோதனைகள் நடைபெறுகின்றன. எனவே சட்ட விரோதமான பொருட்களை கத்தாருக்குள் கொண்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply