மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கு பயணிகள் வருவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

வளை குடா நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்க கோவிட் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளுக்கு கடந்த 14 நாட்களில் பயணம் மேற்கொண்ட பயணிகள் இலங்கையில் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13ம் திகதி வரை இந்த கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தடை செய்வதற்கான திட்டம் முந்தைய நாளில் எடுக்கப்பட்டது.

எனினும், மேலதிக விவாதங்களுக்கு இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது கோவிட் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    (தமிழ்வின்)

Leave a Reply