சவுதி அரேபியாவின் உணவகமொன்றில் வெயிட்டர்களாக மாறிய ரோபோக்கள்

சவுதி அரேபியாவின் ஜாசனில் அமைந்துள்ள உணவகத்தில் வெயிட்டர்களாக மாறிய ரோபோக்கள் பணி புரிய ஆரம்பித்துள்ளன. Robots as Waiters

வெள்ளை நிறத்தில் கையில் உணவுகளை எடுத்து கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் இந்த ரோபோக்கள் பார்வையாளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகம் உள்ள சூழலில் இந்த ரோபோ வெயிட்டர்கள், நிச்சயம் ரோபோ உணவக உரிமையாளர் ரேகம் ஓமர் உதவுவதாக தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, “ இந்த ரோபோக்கள் அருகிலுள்ள அனைத்தையும் உணர்ந்து கொள்ளக் கூடியவை. உணவகத்தில் உள் கட்டமைப்புகளை இந்த ரோபோக்களிடம் நன்கு உள்வாங்கிக் கொண்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இந்த ரோபோக்களை விரும்புகின்றனர். கலாச்சாரங்கள் மாறிவிட்டன. புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு 80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பியது சவுதி அரேபியா!

Leave a Reply