கத்தாரில் வாட்ஸ்அப் பாவிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி! (வீடியோ)

கத்தாரில் வாட்ஸ்அப் பாவிக்கும் அனைவருக்கும் கத்தார் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் தொடர்பான ஹோக்கிங் முயற்சிகள் அண்மையில் அதிகரித்துள்ளதாகவும், வாஸ்அப் பாவனையாளர்கள் அனைவரும், இரண்டு-படி சரிபார்ப்பு  (Two-Step Verification) அம்சத்தை செயற்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்ய உரிய மெபைல் இலக்கத்தை பயன்படுத்தி பெறப்படும், சரிபார்ப்பு இலக்கத்தை பெற்றுக்கொள்ள பல வழிகளில், உரியவர்களை தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளை கூறி, அவர்களது வாட்ஸ்அப் சரிபார்ப்பு இலக்கத்தைப் பெற்று, மேற்படி வாட்ஸ்அப்பின் முழுக் கட்டுப்பாட்டையும் பெற்றுக்கொள்கின்றனர் என்பதாக கத்தார் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

எனவே கத்தார் குடியிருப்பார்கள் அனைவரும் தங்களது வாட்ஸ்அப்பளில்  இரண்டு-படி சரிபார்ப்பு  (Two-Step Verification) அம்சத்தை செயற்படுத்திக் கொள்ளுமாறும், வாட்ஸ்அப் இலக்கத்திற்கான சரிபார்ப்பு இலக்கத்தை யாருடனும் பகிரந்து கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIDEO : வாட்ஸ்அப்பில் Two Step Verification-யை Enable செய்வது எப்படி

இதையும் படிங்க: வெளிநாடுகளில் 2 தடுப்பூசிகளைப் பெற்று இலங்கை திரும்புவோருக்கு தனிமைப்படுத்தல் கிடையாது! PCR மட்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *