கத்தாரில் இன்றைய(ஏப்-26) கொரோனா நிலவரம், 703 புதிய தொற்றாளர்கள், 9 மரணங்கள்!

கத்தாரில் கடந்த 24 மணித்தியாலத்தில் (26.04.2021) புதிதாக 703 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 9 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை  19,367 ஆக உயர்ந்துள்ளது.

வகை இன்றைய நிலவரம் (24-04.2021) மொத்த எண்ணிக்கை
புதிய தொற்றாளர்கள் 703 202,904
குணமடைந்தவர்கள் 1,578 183,100
மரணங்கள் 09 437
வழங்கப்பட்ட புதிய தடுப்பூசிகள் 26,947 1,442,708
புதிய PCR எண்ணிக்கை 11,507 1,884,662
கொரோனா வைரஸ் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்ய 16000 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்,
  • வெளியில் செல்லும் போது முகக் கவசத்தை அணிந்து கொள்ளுமாறும்,
  • சமூக இடைவெளியகளைப் பேணிக்கொள்ளுமாறும்,
  • கொரோனாவிலிருந்து தங்களை காத்துக் கொள்ள கத்தார் சுகாதார அமைச்சினால் வலியுறுத்தப்பட்டுள்ள அனைத்துமுன்னெச்சரிக்கைகளையும் தவறாது பின்பற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply