Indian NewsSaudi News

இந்தியாவுக்கு 80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பியது சவுதி அரேபியா!

சவூதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு 80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளதாக சவுதியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகம் தனது டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளது.

  இந்திய தூதரகம் அதானி குழுமம் மற்றும் M/s லிண்டேவுடன் இணைந்து 80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை இந்தியாவுக்கு அனுப்புவதில் பெருமிதம் கொள்கிறது என்றும்,  சவுதி அரேபியா அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகத்தின் அனைத்து உதவி, ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு எங்கள் நன்றி என்று சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: