சவுதி அரேபியாவின் பிரதமராக நியமிக்கப்பட்ட இளவரசர் முஹம்மத் பின் சல்மான!

Saudi King Salman names Crown Prince Mohammed Bin Salman as prime minister

Saudi King Salman names Crown Prince Mohammed Bin Salman as prime minister

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக சவுதியின் உத்தியோக பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக அப்பதவியில் மன்னரே பொறுப்பு வகிப்பார்.

இளவரசர் ஏற்கெனவே சில ஆண்டுகளாக நாட்டின் ஆட்சியாளராகச் செயல்படும் நிலையில் அவரது அதிகாரம் தற்போது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சவுதி நிவ்ஸ் ஏஜென்ஸி தெரிவித்துள்ளது

இளவரசர் முகமது அடுத்த மன்னராகும் பொறுப்பில் உள்ளார்.

2015-ஆம் ஆண்டிலிருந்து மன்னராக வீற்றிருக்கும் அவரது 86 வயதுத் தந்தை இவ்வாண்டு மட்டும் இரண்டு முறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சவுதி அரேபியாவில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தில் உள்துறை, வெளியுறவு, எரிசக்தி ஆகியவற்றின் அமைச்சர் பொறுப்புகளில் மாற்றமில்லை. (செய்தி)

Also Read: கத்தார் பீபா போட்டிகளைக் காண 8000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணிக்கும் நண்பர்கள்!

Leave a Reply