கத்தார் பீபா போட்டிகளைக் காண 8000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணிக்கும் நண்பர்கள்!

From Paris to Doha cycle ride to watch FIFA

கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18, 2022 வரை நடைபெறவுள்ள FIFA உலகக் கோப்பை 2022 ஐக் காண பிரான்சில் இருந்து இரு நண்பர்கள் கத்தாருக்கு பயணித்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

26 வயதான கேன் நகரைச் சேர்ந்த மெஹ்தி மற்றும் போர்டோக்ஸைச் சேர்ந்த கேப்ரியல் ஆகியோர் பாரிஸிலிருந்து புறப்பட்டு, கையில் தண்ணீர் மற்றும் இரண்டு கூடாரங்களுடன் 8,000 கிலோமீட்டர் சைக்கிள் மிதிவண்டியில் செல்லும் சவாலை ஏற்று தற்போது பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

பைக்கில் பயணம் செய்து, இரண்டு நண்பர்களும் பத்து நாடுகளைக் கடந்து போட்டியை நடத்தும் நாடான கத்தாரை அடையவுள்ளனர்

பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா ஆகிய நாடுகளைக் கடந்து இருவரும் தற்போது துருக்கியை அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும்  விரைவில் மத்திய கிழக்கு நாடுகளுக்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்படி இருவரும் தங்களது பயண அனுபவங்கள் மற்றும் பிரயாணத்துடன் தொடர்புடைய வீடியோக்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: கத்தார் பீபா கால்ப்பந்து உலக கிண்ணத்திற்கான இறுதி கட்ட டிக்கட் விற்பனை இன்று ஆரம்பம்!

Leave a Reply