கத்தாரில் ஒரு மாதத்திற்கு மூடப்பட்டுள்ள கொர்னிச் சாலை!

Qatar Corniche Road closed for one month

Qatar Corniche Road closed for one month

கத்தார் – கொர்னிச் சாலையில் அமைந்துள்ள இஸ்லாமிய நூதனசாலை சுற்றுவட்டம் தொடக்கம் ஜாபிர் பின் முஹம்மத் சாலை வரையான பகுதிய ஒரு மாதத்திற்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் பொதுப் பணி ஆணையம் (அஷ்ஆல்) இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜுன் மாதம் 11ம் திகதி முதல் ஜுலை மாதம் 10 திகதி வரை மேற்படி வீதி திருத்தப்பணிகளுக்காக மூடப்படுவதாகவும், வாகன ஓட்டுநர்கள் உரிய மாற்று வீதிகளைப் பயன்படுதிக் கொள்ளுமாறு பொதுப்பணி ஆணையும் கேட்டுக் கொண்டுள்ளது.

சீரான வாகனப் போக்குவரத்து செய்பாடுகளுக்கு கத்தார் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் முணைப்புடன் செயற்படுவார்கள் என்பதாகவும், உரிய அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்துப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வர்த்தக அமைச்சின் விதிமுறைகளை மீறிய இரு வியாபார நிறுவனங்களை மூடிய கத்தார் அதிகாரிகள்

Leave a Reply