வர்த்தக அமைச்சின் விதிமுறைகளை மீறிய இரு வியாபார நிறுவனங்களை மூடிய கத்தார் அதிகாரிகள்

கத்தாரின்  அல் வக்ரா மற்றும் அல் அஸீஸியா நகரங்களில் அமைந்துள்ள உள்ள ரஃபீக் மார்ட் டிரேடிங்கின் (Rafeeq Mart Trading qatar) இரண்டு கிளைகள் ஒரு மாதத்திற்கு மூடப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை கத்தார் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் தனது உத்தியோக பூர்வ கணக்கு ஊடாக இதனை தெரிவித்துள்ளது.

மேற்படி வியாபார நிறுவனத்தின் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான விலைகள் அனுமதிக்கப்பட்ட விலையை விட அதிகமாக காணப்பட்டதாலும், அமைச்சின் கொள்கைகளை சரிவர பின்பற்ற தவறியதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும்  தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிறுவனத்தின் டெலிவரி செயலியும் ஒரு மாதத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

 நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான 2008 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க சட்டத்தின் பிரிவு எண் 10 மற்றும் 2011 ஆம் ஆண்டின் அமைச்சர்கள் தீர்மானம் எண் 1 இன் சட்ட எண் 4 போன்றவற்றால் காற்கறிகள் மற்றும் பழங்கள் தொடர்பாக நிர்ணயம் செய்யப்பட்ட விதிமுறைகளை மேற்படி நிறுவனம் மீறியுள்ளமையினால் ஒரு மாதத்திற்கு மூடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தார் Al Ghanim பிரதான பேரூந்து நிலையம் நிரந்தரமாக மூடப்படுகிறது!

Leave a Reply