Qatar

கத்தார் Al Ghanim பிரதான பேரூந்து நிலையம் நிரந்தரமாக மூடப்படுகிறது!

கத்தார் Al Ghanim பிரதான பேரூந்து நிலையம் நிரந்தரமாக மூடப்படுகிறது!கத்தார் பிரதான Al Ghanim பேரூந்து நிலையம் நிரந்தரமாக மூடப்படவுள்ளதாக Mowasalat  அறிவித்துள்ளது.

கத்தாரிலுள்ள பஸ் சேவைகளை நவீனப்படுத்தி பஸ் வலையமைப்பை புதுப்பிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய பஸ் தரிப்பு நிலையங்கள் உருவாக்கப்படவுள்ளன. அந்த வகையில் எதிர்வரும் ஜுன் மாதம் 15ம் திகதி முதல் கத்தாரின் Al Ghanim பகுதியில் அமைந்துள்ள பிரதான பஸ் தரிப்ப நிலையம் நிரந்தரமாக மூடப்படவுள்ளதாக பொதுப்போக்குவரத்துக்குப் பொறுப்பான Mowasalat தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் ஊடாக அறிவித்துள்ளது.

பயணிகள் அனைவரும் தங்களது கைப் பேசிகளில் Karwa Bus செயலியை நிறுவி, பஸ்சேவை தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளும் படி வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் தங்குமிடங்களுக்கான வாடகைகள் சடுதியாக உயர்வு!

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: