கத்தாரில் தங்குமிடங்களுக்கான வாடகைகள் சடுதியாக உயர்வு!

House rents go high in Qatar in 2022

House rents go high in Qatar in 2022

கத்தாரில் இந்த வருடம் இறுதியில் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில் வீட்டு வாடகைகள் 2022ம் ஆண்டின் முதல் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாடகை உயர்வானது எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக் கூடியாக சாத்தியாங்கள் காணப்படுவதாக உலகளாவிய ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கால்ப்பந்து உலகக் கிண்ண ரசிகர்களுக்கான டிக்கட் விற்பனை  Supreme Committee and Legacyயினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிக்கட் கொள்வனது செய்தவர்களுக்கு தங்குமிடங்கள் ஒதுக்கப்பட ஆரம்பித்ததைத் தொடர்ந்து சந்தையில் கேள்வி அதிகரித்துள்ளது.

உலகக் கிண்ணத்திற்காக பணி புரிய இருக்கும் ஊழியர்களுக்கான தங்குமிடங்கள் தற்போது ஒதுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தங்குமிடங்களுக்கான வாடகைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 10 முதல் 15 விழுக்காட்டினால் அதிகாரித்துள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகளை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட தங்குமிடங்களின் வாடகைகள் அதிகரிக்கப்பட்டது போல் ஏற்கனவே பாவனையிலுள்ள அபார்ட்மன்கள் மற்றும் வில்லாக்கள் போன்ற பழைய கட்டிடங்களின் வாடகைகளும் சடுதியாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இறுதிப்பகுதியில் குடியிருப்பு வாடகைகள் 30 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்பதாக கட்டியம் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் கடும் சூடு! இன்று (ஜுன்-1) முதல் 10.00 – 3.30 மணி வரை பொது வெளியில் பணியமர்த்த தடை!

House rents go high in Qatar in 2022

Leave a Reply