ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய ஜனாதிபதி அறிவிக்கப்பட்டார்!

Zayed Al Nahyan elected as UAE president

Zayed Al Nahyan elected as UAE president

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய ஜனாதிபதியாக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியாக இருந்த ஷேக் கலீபா தனது 73வது வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே அலுவல் பணிகளை அவர் கவனித்து வந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய ஜனாதிபதியாக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் உயர் மட்ட கவுன்சில் அறிவித்துள்ளது.

61 வயதாகும் இவர், ஐக்கிய அரபு அமீரகத்தின் 3வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் பிக்பாக்கெட் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஐவர் ஆசிய நாட்டவர்கள் கைது!

Leave a Reply