கத்தாரில் பிக்பாக்கெட் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஐவர் ஆசிய நாட்டவர்கள் கைது!

Qatar MOI 5 arrested for pickpocketing in crowded areas

Qatar MOI 5 arrested for pickpocketing in crowded areas

கத்தாரில் பிக்பாக்கெட் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஐவர் ஆசிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

உள்துறை அமைச்சின் குற்றவியல் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையிலேயே மேற்படி ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்படி நபர்கள் சனநெறிசல் அதிகமான இடங்களில் பிக்பாக்கெட் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளதோடு, தனிப்பட்ட நபர்களின் பெறுமதியான பொருட்களை திருடிவந்துள்ள விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

உள்துறை அமைச்சினால் அமைக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினால் பிக்பாக்கெட் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்தாகவும், அவர்கள் அனைவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாகவும், அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply