புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்ய கட்டணம் எவ்வளவு? விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?

What is the Cost of Advertising on Burj Khalifa

டுபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்ய எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா? தெரிந்தால் இவ்வளவு செலவா செய்றாங்கன்னு ஷாக் ஆகிடுவீங்க! அதுவும் இந்த கட்டணம் ஒரு முறை திரையிட மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

டுபாயில் உலகின் மிக உயரமான கட்டடமாக புர்ஜ் கலீபா உள்ளது. இங்கு உலகின் முக்கிய நிகழ்வுகளும் வெளிநாட்டு தலைவர்கள், அமைச்சர்கள் வரும் போது அவரவர் நாடுகளின் சிறப்புகள் அடங்கிய காட்சிகள் ஒளிபரப்புவது வாடிக்கை. இந்திய சுதந்திர தினம், குடியரசு தினத்தின் போது புர்ஜ் கலீபா கட்டடத்தில் இந்திய தேசியக் கொடி ஒளிர்கிறது.

உலக தலைவர்கள், அமைச்சர்கள் வந்தால் ஐக்கிய அரபு அமீரக அரசே அந்தந்த நாடுகளின் சிறப்பை விளக்கி அவர்களை கவுரவப்படுத்தும். இதே தனிநபர்கள் இந்த கட்டடத்தில் ஏதேனும் ஒளிபரப்ப வேண்டுமானால் 3 நிமிடங்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 57 லட்ச ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதுவே அந்த விளம்பரம் வார இறுதி நாட்களில் இரவு 8 மணி முதல் இயங்கத் திட்டமிடப்பட்டிருந்தால் அதற்கு 79 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். இரவு 10 மணி வரை ஒரு வார இறுதி நள்ளிரவுக்கான செலவு 1.13 கோடி ரூபாயாகும். இரவு 7 மணிக்கு மேல் விளம்பரம் ஒளிபரப்பினால் ரூ 2.27 கோடி செலவாகும்.

புர்ஜ் கலீபாவின் விளம்பரங்களை நிர்வகிக்கும் நிறுவனம் துபாயில் உள்ள முல்லன் லோவ் மெனா ஆகும். இந்த புர்ஜ் கலீபாவின் உரிமையாளர் எமார் பிராப்பர்டீஸ். இவரிடம் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவருடைய அனுமதியின்றி அந்த கட்டடத்தில் ஒரு விளம்பரம் கூட வெளியிடப்படமாட்டாது.

இத்தகைய தலையை சுற்றும் இந்த கட்டணத்தை செலுத்தி இந்தி நடிகர் ஷாரூக் கான் தனது பிறந்த நாளுக்கு லேசர் ஷோ ஒளிபரப்பச் செய்தார். அது போல் நடிகர்கள் ரன்வீர் கபூர், தீபிகா, துல்கர் சல்மான் உள்ளிட்டோரும் இந்த புர்ஜ் கலீபா கட்டடத்தில் லேசர் ஷோக்களை தங்கள் சொந்த செலவில் ஒளிபரப்பியுள்ளனர். (Thanks One India )

Also Read: கத்தாரிடமிருந்து 12 போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா!

Leave a Reply