குவைத் ஆட்சியாளர் தனது 86 வயதில் காலமானார்!

kuwait-emir-passed-away

குவைத்தின் ஆட்சியாளர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா தனது 86வது வயதில் இன்று காலமானார்

குவைத்தின் எமிர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா அவசர மருத்துவ சிகிச்சை தேவை காரணமாக நவம்பர் மாத இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மரணம் குறித்த அறிவிப்பு குவைத் அரசு தொலைக்காட்சியில் இன்று வெளியிடப்பட்டது.

அவரது மறைவையிட்டு 40 நாட்கள் துக்க தினம் குவைத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அரச அலுவலகங்களுக்கு 3 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குவைத்தின் புதிய ஆட்சியாளராக Sheikh Meshal al-Ahmad al-Jaber Al-Sabah அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதாக குவைத்தின் உத்தியோக பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

Sheikh Meshal al-Ahmad al-Jaber Al-Sabah

Leave a Reply