காஸா மக்களின் போராட்டத்தை விமர்சித்து பதிவிட்ட இந்திய வைத்தியர் பஹ்ரைனில் கைது!

Indian Origin Doctor in Bahrain Arrested for Anti-Palestine Posts

காஸா மக்களின் போராட்டத்தை விமர்சித்து, இஸ்ரேலுக்கு ஆதரவாக  பதிவிட்ட இந்திய வைத்தியர் பஹ்ரைனில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

50 வயதுடை வைத்தியர் Sunil J Rao இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் ரோயல் பஹ்ரைனில் வைத்தியசாலையில் விசேட மருத்துவராக பணியாற்றி வந்தார்.

தற்போது ஹமாஸ் இயக்கத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்று வரும் தாக்குதல்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், பலஸ்திலுக்கு எதிராகவும் கருத்துக்களை தனது டுவிட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவேற்றம் செய்தடையினால் பஹ்ரைன் பெலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பஹ்ரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர் பணியாற்றி வந்த பஹ்ரைன் ரோயல்  சைத்தியசாலையினால் உடனடியாக அமூலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுளள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கத்தாரில் விசா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் அதிகாரிகளால் கைது!

Leave a Reply