கத்தாரில் டெலிவரி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தினந்தோறும் விபத்தில் சிக்குகின்றனர்

Qatar delivery drivers get into accidents every day

Qatar delivery drivers get into accidents every day

கத்தாரில் டெலிவரி மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் சடுதியாக உயர்ந்துள்ளதாகவும், மேற்படி விபத்துக்களினால் இறப்பு, மற்றும் பாரதூரமான காயங்களும் ஏற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், கத்தார் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

”மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற விசேட செயலமர்விலேயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கத்தார் போக்குவரத்து ஆணையத்தின் பிரதம நிருவாகி Brigadier Muhammad Radi Al-Hajri அவர்கள் இது பற்ற கருத்து தெரிவிக்கும் போது கொரோனா தொற்று நோய் நிலைமை காரணமாக பொதுமக்கள் மத்தியில் பொருட்களை ஆன்லைனில் கொள்வனவு செய்யும் பழக்கம் அதிகமானது. எனவே பொருட்களை டெலிவரி மோட்டார் சைக்கிள் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் நடைமுறை அதிகமானதால் தினந்தோறும் மேட்டார் சைக்கிள் விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

உண்மையில் இது மிக வேதனைதரக்கூடிய நிகழ்வாகும். மேற்படி விபத்துக்களை தடுப்பதாக கத்தார் வர்த்தக அமைச்சு, ஹமத் வைத்தியசாலை, மற்றும் கத்தார் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவொன்று வரவேண்டி கட்டாயம் இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் ஹமத் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில் அண்மைக்காலமாக டெலிவரி மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் சிக்கியவர்கள் அதிகமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மத்திய கிழக்கு நாடுகளில் மோட்டார் சைக்கிள் டெலிவரி சாரதிகளாக பணிபுரிபவர்களே! அவசியம் வாசியுங்கள்!

Qatar delivery drivers get into accidents every day

Leave a Reply