Qatar NewsQatar Tamil News

கத்தாரில் தூசிக் காற்றுடன் கூடிய காலநிலை! பொதுமக்களுக்கு உள்துறை அமைச்சின் அறிவுறுத்தல்

Dust Climate Reported in Qatar

ஈராக்கில் நேற்று உருவான புழுதிக் காற்றினால் கத்தாருக்கும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கத்தார் முழுதும் துசிக் காற்றின் தாக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தூசிக் காற்றின் தாக்கமானது இன்று மாலை முதல் படிப்படியாக குறையும் என்றாலும், தாக்கம் வார இறுதிவரை தொடரக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அமைச்சு எதிர்வு கூறியுள்ளது.

எனவே பொதுமக்கள் பின்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றும் படி கத்தார் உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

  1. அவசியமான தேவையின் இன்றி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். குறிப்பாக முதியவர்கள், ஆஸ்த்தா நோயாளிகள் வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள்
  2. கண் அல்லது மூக்கு தொடர்பான சத்திர சிகிச்சைகளை அண்மையில் செய்து கொண்டவர்கள் கட்டாயம் தூசிக்காற்றினை தவிர்ந்து கொள்ளுங்கள்
  3. முகம், மூக்கு, மற்றும் கைகளை அதிகம் கழுவி தூசியிலிருந்து தங்களை காத்துக்கொள்ளுங்கள்
  4. அத்திய அவசிய தேவைகாரணமாக வெளியே பயணிக்க வேண்டியேற்பட்டால் முகக் கவசத்தை கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள்
  5. கண்களை தூசியிலிருந்து பாதுகாக்க கண் கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள். மேலும் துசியுடன் கூடிய கைகளால் கண்களைத் தொடுவதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்

அத்துடன் திறந்த வெளிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த நிறுவனங்கள் தவறாமல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதாக அமைச்சு தெரிவித்துள்ளதோடு, வாகன ஓட்டுநர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் டெலிவரி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தினந்தோறும் விபத்தில் சிக்குகின்றனர்

Related Articles

Leave a Reply

Back to top button
%d