நீங்கள் கத்தார் தூசிக் காற்று அனர்த்தத்தில் சிக்கினால் 184 க்கு அழைத்து முறையிடுங்கள்!

நீங்கள் கத்தார் தூசிக் காற்று அனர்த்தத்தில் சிக்கினால் 184 க்கு அழைத்து முறையிடுங்கள் என்பதாக கத்தார் நகராட்சி அமைச்சின் கீழ் இயங்கும், சுகாதாரத் துறைப் பிரிவு தெரிவித்துள்ளது.

கத்தார் தூசிக் காற்று நிலைமையை சமாளிக்க 100க்கும் மேற்பட்ட ரோந்துப் பிரிவுகள் (Patrol Units) களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கத்தார் முழுதும் தற்போது 173 ரோந்துப் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் துசிக் காற்றுத் தாக்கத்தினால் ஏற்படும், மணல் திட்டுக்களை அகற்றுதல், முறிந்து விழும் மரங்களை அகற்றுதல், போக்குவரத்து நெரிசல்களை நீக்குதல் போன்ற பணிகளுக்காக காத்திருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கத்தார் வாழ் பொது மக்கள் யாராயினும் தூசிக் காற்று அனர்த்தத்தில் சிக்கினால் 184 க்கு அழைத்து முறைப்பாடுகளை பதிவு செய்யுங்கள் என்பதாக கத்தார் நகராட்சி அமைச்சின் கீழ் இயங்கும், சுகாதாரத் துறைப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் தூசிக் காற்றுடன் கூடிய காலநிலை! பொதுமக்களுக்கு உள்துறை அமைச்சின் அறிவுறுத்தல்

Leave a Reply