கத்தார் வாகன ஓட்டுநர்கள் கவனத்திற்கு! இதை செய்தால் 500 ரியால்கள் அபராதம்!

500 fine for this in Qatar

500 fine for this in Qatar

கத்தாரில் அதிவேக பெருந்தெருக்கள் நாடெங்கும் நிர்மாணிக்கப்பட்டு நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உள்துறை அமைச்சின் கீழ் இயங்கும் போக்குவரத்து திணைக்களம் முக்கிய அறிவித்தல்  ஒன்றை விடுத்துள்ளது.

அதிவேக தெருக்களில் உள்ள வழித்தடங்களில் மெதுவாக வாகனம் செலுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதாக போக்குவரத்துறைப் பணிப்பாளர் Lt. Col. Jaber Muhammad Odaiba  அவர்கள் அல்ஷார்க் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

நான்கு அல்லது 5 வழித்தடங்களைக் கொண்ட அதிவேக பெருந்தொருக்களில் மெதுவாக வாகனம் செலுத்துவதானது விபத்துக்களுக்கான காரணமாக அமைக்கின்றது. ஏனைய வழித்தடங்களில் வேகமாக வரும் வாகனங்கள் மெதுவாக செல்லும் வாகனங்களில் மோதுவதற்கு அதிகமாக சந்தா்ப்பங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கத்தாரின் போக்குவரத்து விதிகளின் 53 இலக்கத்தின் படி இது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 500 ரியால் அபராதம் குறைந்த பட்சமாக விதிக்கப்படமுடியும் என்பதோடு, குற்றங்களின் தன்மையைப் பொறுத்து அபராத்தொகையை அதிகரிக்க முடியும் என்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கத்தாரின் தெருக்களைப் பொருத்த வரை வேகக் கட்டுப்பாடானது மணித்தியாலத்திற்கு 60-100 கிலோ மீற்றர்கள் என்ற அடிப்படையில் காணப்படுகின்றது. அதிவேக வீதிகளைப் பொறுத்தவரை உச்ச வேகமாக மணித்தியாலத்திற்கு 120 கிலோ மீற்றர் என்பதாக வரையறை செய்யப்பட்டுள்ளது என்பதை வாகன ஓட்டுநர்கள் கருத்திற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

500 fine for this in Qatar

இதையும் படிங்க: கத்தாரில் டெலிவரி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தினந்தோறும் விபத்தில் சிக்குகின்றனர்

Leave a Reply