கத்தாரில் தனது 17வது கிளையை Ain Khaled நகரில் திறந்தது LULU குழுமம்

LuLu Groups Open 17th Branch in Qatar

கத்தாரில் தனது 17 வது கிளையை Ain Khaled நகரில் LULU குழுமம் நேற்று (21.04.2022) முதல் உத்தியோக பூர்வமாக திறந்துள்ளது.

புதிய LULU கிளையாளது உலக தரத்திலான பல புதிய வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விஷேட தரிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் குழுமத்தின் நிறுவனர் ஜனாப். யூஸுப் அலி அவர்கள் கலந்து கொண்டார்கள். அத்துடன் கத்தார் வணிக அமைச்சின் பிரமுகர்களும், கத்தாருக்கான இந்தியத் தூதுவர் மற்றும் கத்தாருக்கான இலங்கைத் தூதுவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

உலக தரத்திலான அனுபவத்தினை பெற்றிடவும், அனைத்து வகையான பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளவும் தங்களை நாடி வருமாறு LULU குழுமம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தார் உள்ளூர் தயாரிப்பு மின்கம்பங்களை மூலம் அலங்கரிக்கபடும் கொர்னிச் சாலை!

Leave a Reply