Qatar Tamil News

கத்தார் உள்ளூர் தயாரிப்பு மின்கம்பங்களை மூலம் அலங்கரிக்கபடும் கொர்னிச் சாலை!

கத்தார் உள்ளூர் தயாரிப்பு மின்கம்பங்களை மூலம் கொர்னிச் சாலையை அலங்கரிக்கும் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரின் சாலைகள் மற்றும் பொது இடங்களை அழகுபடுத்துவதற்கான மேற்பார்வை குழுவினால் கொர்னிச் வீதியில் 1440 அலங்கார மின்கம்பங்கள் நிறுவ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டமானது எதிர்வரும் 2022ம் ஆண்டு நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக மேர்பார்வைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த அலங்கார மின் கம்பங்களானது கத்தாரில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு உள்ளூரில் தயாரிக்கப்பட்டதாகும். இவை பேரித்த மரங்களின் ஓலைகளைப் பிரதிபலிக்கும் கத்தாரின் அடையாளமாகும்.

கொர்சிச் சாலையின் இருமருங்கிலும், மற்றும் மத்திலும் நிறுவப்படவுள்ளன. இந்த செயற்றிட்டமானது ராஸ் அல் அபூத் மேம்பாலம் அருகில் ஆரம்பித்து செரடன் ஹோட்டல் அருகில் அமைந்துள்ள மாநாட்டு மண்டபம் வரை, சுமார் 10 கிலோ மீட்டர்கள் தூரம் வரை தொடரும்.

கத்தாரின் நகராங்களை அழகுபடுத்தும் பணி சாலைகள் மற்றும் பொது இடங்களை அழகுபடுத்துவதற்கான மேற்பார்வை குழுவிக்குரியதாகும். நாம் அவற்றை திறம்பட செய்ய திட்டமிட்டுள்ளோம். எமது பணிகள், கத்தார் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், காபனீரொட்சைட்டு (CO2) உருவாக்கத்தை குறைக்கும் வகையிலும் காணப்படும் என்பதாக மேற்பார்வை குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க  : கத்தார் பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி மைதானப் பணிகள் நிறையும் தறுவாயில்!

Related Articles

Leave a Reply

Back to top button
%d