கத்தாரில் தனது 15வது கிளையை Muither நகரில் திறந்தது LULU குழுமம்

கத்தாரில் தனது 15 வது கிளையை Muither நகரில் LULU குழுமம் நேற்று (27.09.2021) முதல் உத்தியோக பூர்வமாக திறந்துள்ளது. மைதர் நகரில் அமைந்துள்ள அபூ சித்ரா பல்பொருள் அங்காடியில் LULU HYPERMARKET என்ற பெயரில் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய LULU கிளையாளது உலக தரத்திலான பல புதிய வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2000 தரிப்பிட வசதிகளுடம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் உட்பட 22 உலக நாடுகளில், 214 விற்பனை நிலையங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிவதாகவும், புதிய ஆரம்பிக்கப்பட்டுள்ள கிளையாளது கத்தாரின் 15 கிளையாகவும், உலகளவில் 215 கிளையாகவும் அமைந்துள்ளது.

உலக தரத்திலான அனுபவத்தினை பெற்றிடவும், அனைத்து வகையான பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளவும் தங்களை நாடி வருமாறு LULU குழுமம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தார் உள்ளூர் தயாரிப்பு மின்கம்பங்களை மூலம் அலங்கரிக்கபடும் கொர்னிச் சாலை!

Leave a Reply