தடுப்பூசி பெற்று தாயகம் திரும்பும் இலங்கையர்களுக்கு PCR பரிசோதனை இல்லை

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்குள் பிசிஆர் சோதனை எடுக்கப்பட்டு தொற்றில்லை என உறுதி செய்யப்படும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் முழுமையான தடுப்பூசியை பெற்றிருந்தால் , இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அவர்களை இலங்கை விமான நிலையத்தில் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இலங்கைக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அனைத்து பயணிகளும் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை இரவு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்கே விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு இடம்பெற்றது, இதில் சுகாதாரம் மற்றும் சுற்றுலா அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத இலங்கையர்கள் விமான நிலையத்தில் அல்லது அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் வைத்து பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் பிசிஆர் சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் அவர்கள் 12 வது நாளில் மற்றொரு பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், பிசிஆர் சோதனை முடிவுகள் எதிர்மறையாக இருந்தால் மட்டுமே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

வீட்டில் தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லாதவர்கள் கட்டாயமாக 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு அரசு நடத்தும் தனிமைப்படுத்தல் மையங்கள் அல்லது ஹோட்டல்களைத் தேர்வு செய்யலாம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் அங்கு பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் அசேலா குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கத்தாரில் தனது 15வது கிளையை MUITHER நகரில் திறந்தது LULU குழுமம்

Leave a Reply