கத்தாரில் நோன்புப் பொருநாள் மே 2ம் திகதி கொண்டாடப்படும் – Qatar Calendar House தெரிவிப்பு!

2022 Eid Festival in Qatar

கத்தாரில்  2022ம் ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் மே 2ம் திகதி கொண்டாடப்படும் Qatar Calendar House தெரிவித்துள்ளது.

வானவியல் கணக்குகளின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை எதிர்வரும் 2ம் திகதி தென்படுவதற்கான சாத்திக் கூறுகள் காணப்படுவதாக Qatar Calendar House விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி நோன்புப் பொருநாள் தினம் மே  2ம் திகதியாக இருக்கும் என்பதாகவும், இது தொடர்பான உத்தியோக  பூர்வ முடிவுகள், கத்தார் பிறை கமிட்டி மற்றும் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு போன்றவற்றால் எடுக்கப்படும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உறவுகள் அனைவருக்கும் எமது முற்கூட்டிய நோன்புப் பொருநாள் வாழ்த்துக்கள் ( HAPPY EID MUBARAK)

இதையும் படிங்க: கத்தாரில் தனது 17வது கிளையை AIN KHALED நகரில் திறந்தது LULU குழுமம்

Leave a Reply