நோன்புப் பொருநாளைக்கு விடுமுறை செல்பவர்களுக்கு கத்தார் விமான நிலையத்தின் முக்கிய அறிவித்தல்!

Qatar Airports travel advisory for passengers during the EID

Qatar Airports travel advisory for passengers during the EID

எதிர்வரும் நோன்புப் பொருநாளைக்கு கத்தாரிலிருந்து தாயகங்களுக்கு பயணிக்க உள்ளவர்களுக்கு கத்தார் ஹமத் சர்வதேச விமான நிலையம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதாவது, பயணிகள் விமானப் பயணத்திற்கான check-in ஐ ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளமாறும், விமான நிலையத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர் வருகை தரும்மாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெருநாள் தினங்களில் அதிகளவு பயணிகள் தாயகம் பயணிப்பதன் மூலம் ஏற்படும் நெரிசலை தவிர்த்து சீரான பயண அனுபவத்திற்கு இது வழிவகும் என்பதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பயணிகள் இத்திராஷ் (EHTERAZ) செயலியில் ஆரோக்கிய குறியீடான பச்சை நிறத்தைக் கொண்டிருத்தல் அவசியமாகும் என்பதாவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பயணிகளின் தேவைகருதி விமான நிலையத்தில் சுய செக்-இன் சேவை வசதிகளும், சுயமான போர்டிங் பாஸ்கலை அச்சிட்டுக் கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பயணிகளை வழியணுப்ப வருபவர்கள் குறுகிய நேர பார்கிங் வசதிகளை பயன்படுத்தி வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பயணிகள் தான் பயணிக்கும் நாடுகளில் பின்பற்றப்படும் பிரயான ஒழுங்குகள் பற்றி தெரிவாக அறிந்து கொள்ளும் படியும், விமான பயணங்களுக்கு 60 நிமிடங்களுக்கு முன்னர் செக்-இன் செய்வதற்கான காலம் நிறைவடையும் என்பதையும் பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறும் கத்தார் ஹமாத் விமான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் நோன்புப் பொருநாள் மே 2ம் திகதி கொண்டாடப்படும் – QATAR CALENDAR HOUSE தெரிவிப்பு!

Leave a Reply