Qatar Tamil News

கத்தாரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 20 இலங்கையர்கள் ரமழான முன்னிட்டு விடுதலை!

20 Sri Lankans granted amnesty by Qatar Government

புனித ரமழானை முன்னிட்டு கத்தாரில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 20 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கத்தாரில் தொழில் புரிந்து வந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு சட்டவிரோத செயல்களுடன் தொடர்புபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களுக்கே அரச விடுதலை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களுக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த அபராதமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கத்தாரில் ரமழானை முன்னிட்டு, நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல நாடுகளின் பிரஜைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களின் விடுதலைக்காக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கத்தார் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: உள்ளூரில் தயாரிக்கப்பட்ட அலங்கார விளக்கு கம்பங்கள் மூலம் அழகுபடுத்தப்பட்டுள்ள கத்தார் கொர்னிச்

Related Articles

Leave a Reply

Back to top button
%d